சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம், விரைவில் இடம் அறிவிக்கப்படும் என கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி ‘பாரத் ஜோடோ’ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற “பாரத் ஜோடோ யாத்திரையில்” கலந்துகொண்டபவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக தலைவர் நம்மவர் கமல்ஹாசன்  அவர்களால் சென்னை அடையாறில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்வானது, கமல் கலைக்கூடத்தின் கலைநிகழ்ச்சிகளோடு சிறப்பாக தொடங்கி நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளோம் ,விரைவில் அதற்கான இடம் அறிவிக்கப்படும். மெரினாவில் நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

அதாவது, பொங்கல் பண்டிகை வரக்கூடிய இந்த சூழ்நிலையில் சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக அனுமதி வேண்டி கேட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தனக்கு விருப்பம் இருப்பதாகவும், இதற்காக அனுமதி அனுமதி கிடைக்கும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடத்தப்படும் எனவும், மக்கள் நீதி மய்யத்தின் ஆண்டு விழா வரும் காலத்தில் மிகப்பெரிய  பொதுக்கூட்டத்தையும்  நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.