2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு மானியம், மாணவ மாணவிகளுக்கு கல்லூரி கல்வி கட்டணத்தில் சலுகை, மாணவிகளுக்கு சிறப்பு திட்டம், விவசாயிகளுக்கு மானியம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிகிறது.

இந்நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதியானசமையல் எரிவாயு சிலிப்பதற்கான 100 ரூபாய் மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. தற்போது வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1118.50 ஆக உள்ளது. மத்திய அரசின் மானியம் கிடைக்காததால் மாநில அரசு 100 ரூபாய் மானியம் வழங்குவது பற்றிய அறிவிப்பு வெளியாகுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.