2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு மானியம், மாணவ மாணவிகளுக்கு கல்லூரி கல்வி கட்டணத்தில் சலுகை, மாணவிகளுக்கு சிறப்பு திட்டம், விவசாயிகளுக்கு மானியம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிகிறது.

இதில் மின்துறை சார்பாக பல்வேறு புதிய திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்ட மாதம் ஒருமுறை மின் கணக்கிடும் முறை, மின்சார முறைகேடு, மின் இழப்புபோன்றவற்றை தடுக்க அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் பற்றி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.