2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. இதய அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு மின்னணு வடிவில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட்டில் திமுக தேர்தல் வாக்குறுதி அளித்த அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை, மாணவர்கள் கல்வி கடன் தள்ளுபடி, கேஸ் சிலிண்டருக்கு மானியம், மாணவ மாணவிகளுக்கு கல்லூரி கல்வி கட்டணத்தில் சலுகை, மாணவிகளுக்கு சிறப்பு திட்டம், விவசாயிகளுக்கு மானியம், விளையாட்டு வீரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம் பெறும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த கூட்டத் தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சியான அதிமுக தயாராகி வருகிறது. அதன்படி சட்டம் ஒழுங்கு, பேனா சின்னம், நீட் தேர்வு, பால்வினை உள்ளிட்டவைகளை குறித்து இபிஎஸ் கேள்வி எழுப்ப உள்ளதாக அதிமுக தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.