தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் புதிய குழப்பம் எழுந்துள்ளது. பொதுவாக அமாவாசையிலிருந்து நான்காவது நாள் தான் விநாயகர் சதுர்த்தி வரும்.

அதன்படி ஆவணி மாத அமாவாசையிலிருந்து நான்காம் நாளான செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு ஒரு நாள் முன்பாக செப்டம்பர் 17ஆம் தேதி அரசு பொது விடுமுறை அறிவித்ததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொது விடுமுறையை செப்டம்பர் 18ஆம் தேதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.