தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதில் மொத்தம் 27 ஆயிரத்து 215 காலி பணியிடங்கள் உள்ளது. இந்த இடங்களுக்கு விதிமுறைகளை பின்பற்றி நிரப்பப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு மாணவர் சேர்க்கை ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் அதிகம் பெறப்பட்டுள்ள நிலையில் நடப்பு ஆண்டில் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அரசு கல்லூரிகளில் 20 சதவீதமும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதமும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதமும் கூடுதலாக உயர்த்தப்பட உள்ளது. ஜூலை மூன்றாம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதன் பிறகு கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தால் தொடர்ந்து ஜூலை 3 முதல் ஆறாம் தேதிகளில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.