தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் 50% அகவிலை படியை பெறுவார்கள். ஆனால் தற்போது சென்னை கருவுலக கணக்கு துறை ஆணைகளின் கடிதம் செய்தி குறிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கான ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் தான் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேல அமைப்பு அறிவிப்பில் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் 50 சதவீத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று உள்ளது. அதனால் மார்ச் மாத ஊதியத்தில் உயர்த்தப்பட்ட அகல விலைப்படி கிடைக்காது என்றும் பிப்ரவரி மாதம் பெற்ற அதே தொகையை தான் மார்ச் மாதம் ஊதியமாக ஊழியர்கள் பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 30ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று ஏப்ரல் மாத ஊதியத்துடன் நான்கு சதவீத அகல விலைப்படி சேர்த்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.