மதுரை மாவட்டம் பாரப்பத்தியில், தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. மேடையில் இருந்த நிர்வாகிகளுக்கு மரியாதையுடன் வணக்கம் கூறிய தவெக தலைவர் விஜய், பின்னர் மேடையில் நின்றிருந்த தாயும் தந்தையும் இருக்கைகளில் அமரும்படி கேட்டார்.
இதனை நேரில் கண்ட தொண்டர்கள் பெரும் உற்சாகத்தில் கைகொட்டினர். தொடர்ந்து விஜய் ரேம்ப் வழியாக சென்றபோது, தொண்டர்கள் வீசிய துண்டுகளை அன்புடன் தனது கழுத்தில் போட்டு கொண்டார். அந்த நேரத்தில் சிலர் தடுப்புக் கம்பிகளை தாண்டி ரேம்ப் மேல் செல்ல முயற்சித்ததைக் கண்டு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் உடனடியாக தக்க நடவடிக்கை எடுத்து பரபரப்பை சமாளித்தனர்.
மாநாட்டில் பேசிய தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நுழைவு வாயிலில் ஏன் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார். மாநாட்டில் பேசிய தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாநாடு நுழைவு வாயிலில் ஏன் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். படங்களை வைத்திருக்கிறோம் என விளக்கினார். அவர் பேசியதாவது; “1967ல் அண்ணா, சமூக நீதிக்காக, சமத்துவத்திற்காக, ஊழலற்ற அரசாக உருவாக்கிய அரசு திராவிட அரசு. அதன் வழியில் வந்த கலைஞர் கருணாநிதியும், எம்.ஜி.ஆரும், 1971 தேர்தலில் வெற்றி பெற்றனர்.
ஆனால், அதன் பிறகு கருணாநிதி தன் குடும்பத்தின் கட்சியாக மாற்றியபோது, 1972ல் அதற்கு எதிராக குரல் கொடுத்து புரட்சித் தலைவர் உருவானார். இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அண்ணாவின் கொள்கையில் இருந்து விலகிவிட்டார். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து தடுமாறி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள இன்றைய அதிமுக தலைமை. எனவே அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆர். கொள்கைகளையும், உள்வாங்கி அதனை அரசியல் வெற்றியாக மாற்றி 2026 தலைவர் விஜய் வெற்றி பெறுவார்” இவ்வாறு பேசினார்.
“எனவே, இந்த கொள்கைகளை மீண்டும் மக்கள் மனங்களில் பதிய, மற்றும் அதனை அரசியல் வெற்றியாக மாற்றும் பணியில் தவெக களமிறங்கியுள்ளது. 2026 தேர்தலில் விஜய் தலைமையில் வெற்றி பெறும் நாளும் தொண்டர்களின் உழைப்பும் சேர்ந்து புதிய தமிழகத்தை உருவாக்கும்” என்றார் ஆதவ் அர்ஜுனா. அவரது உரை மாநாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, விஜய்க்கு ஆதரவாக எழுச்சிகரமான கோஷங்கள் ஒலிக்கச் செய்தது.
