
தமிழகத்தில் ஆதரவாற்ற குழந்தைகள் தங்கி பயில்வதற்காக அரசு குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வரும் நிலையில் பெற்றோரை இழந்த குழந்தைகள், பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள் விழுப்புரம் , கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மூன்று மாவட்டங்களில் அமைந்துள்ள இல்லத்தில் சேர்ந்து படிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கு இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதி வழங்கப்படும் எனவும் மாணவர்களுக்கு தேவையான நூலகம், கணினி மற்றும் தட்டச்சு பயறுவதற்கான அறைகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த இல்லத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் என்ற முகவரிக்கு நேரடியாக சென்ற விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் விழுப்புரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு எண்ணை 04146-290659 தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.