தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இரண்டு ஆண்டுகளை கடந்துள்ளது. இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்திற்கு அரசு தயாராகி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் வருகின்ற மே 23ஆம் தேதி வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதற்கு முன்னதாக தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய திட்டமிடப்பட்டு வருகிறது.

அதன்படி சிவப்பு பட்டியல் ஒன்றை தயாரித்து அதில் சில அமைச்சர்களின் பெயரை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நேற்று அமைச்சர் நாசர் பதவி காலியானதோடு மட்டுமல்லாமல் அமைச்சரவையில் உள்ள பலரது இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தென்னரசுக்கு நிதித்துறை மற்றும் கனிமவளத்துறை, அமைச்சர் பிடிஆர்-க்கு தொழில்நுட்பத் துறை, மனோ தங்கராஜுக்கு பால்வளத்துறை, துரைமுருகனுக்கு சட்டத்துறை, ரகுபதிக்கு நீர்வளத்துறை மற்றும் புதிதாக அமைச்சரவைக்குள் வரும் டிஆர்பி ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.