தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் 446 கல்லூரிகளில் 90 கல்லூரிகள் தன்னாட்சி அந்தஸ்து பெற்று விளக்குகின்றன. இந்த கல்லூரிகள் புதிய விதிமுறைகளை பூர்த்தி செய்யவில்லை எனில் உடனடியாக தன்னாட்சி அந்தஸ்து திரும்ப பெறப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இளங்கலை படிப்பில் 70% மாணவர் சேர்க்க இருப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கல்லூரிகளாக இருக்கும் அனைத்து கல்லூரிகளிலும் தன்னாட்சி அந்தஸ்து விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.