தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளில் கைதிகளுக்காக இயக்கப்படும் உணவு விடுதிகளில் பயோமெட்ரிக் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக சிறை துறையின் கீழ் மொத்தம் 142 சிறைகள் உள்ள நிலையில் மொத்த கைதிகளில் சுமார் 70 சதவீதம் கைதிகள் மத்திய சிறையில் உள்ளனர். கைதிகளின் நலனை கருதி மத்திய சிறைகளிலும் பெண்கள் தனி சிறைகளிலும் கைதிகள் உணவு விடுதிகள் செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதிகளில் சோப்பு, பிஸ்கட்,தேங்காய் எண்ணெய் மற்றும் பழங்கள் உள்ளிட்டா பல பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. என் நிலையில் விடுதியில் சேவை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்பட வேண்டும் என்பதற்காக உணவு விடுதி முழுமையாக கணினி மயமாக்கப்பட்ட பயோமெட்ரிக் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக கைதிகள் இடி விடுதியில் பொருட்கள் வாங்குவதற்கு ஸ்மார்ட் கார்டு மற்றும் அவர்களது விரல் ரேகை பதிவு போதுமானதாகும். இதற்காக ஸ்மார்ட் கார்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.