தமிழகம் முழுவதும் 1847 காவலர்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் வருவதை முன்னிட்டு சொந்த ஊர் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் காவலர்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள டிஜிபி உத்தரவிட்டிருந்த நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்த சுமார் 1847 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.