தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு வழங்கும் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களை சென்றடைகின்றன. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு சிறப்பாக வழங்கியதற்காக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஒரு கோடியே 7 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு குடும்ப அட்டைக்கு 50 பைசா வீதம் 33,609 கடைகளில் பணிபுரியும் 20,712 பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகை மண்டல வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்திற்கான தொகை சம்பந்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்கில் வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.