தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கோடை விடுமுறை முடிவடைந்த ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

அதனால் தமிழக அரசு பள்ளி திறப்பு தேதியை ஜூன் ஏழாம் தேதியாக மாற்றி சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்பை பொருட்படுத்தாமல் சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இன்றே திறந்ததாக புகார்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் ஏழாம் தேதிக்கு முன்னர் எந்த பள்ளிகளும் திறக்க கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.