தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், சென்னையில் 10 இடங்கள் உட்பட தமிழகம் முழுவதும் சுமார் 100 இடங்களில் மெகா மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. வருகின்ற ஜூன் 24ஆம் தேதி நடக்கும் இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று அனைவரும் பயன்பெறலாம் என அறிவித்துள்ளார்.