தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாட நூல்களை பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் வரும் கல்வி ஆண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான தமிழ் வழி, ஆங்கில வழி மற்றும் சிறுபான்மை மொழிகளுக்கான பாட நூல்கள், ஒன்னு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இதர கல்வி உபகரணங்களுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்தும் பள்ளி திறப்பதற்கு முன்பாக விநியோக மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து எவ்வித கால தாமதத்திற்கும் இடையில்லாமல் கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவர்களுக்கும் பாடநூல்கள் மற்றும் ஓட்டு புத்தகங்கள் அனைத்தையும் வழங்கிடும் வகையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்விக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.