
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை கண்காணிக்க நவீன கேமராக்கள் அமைக்க புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. தேசிய மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய நகரங்களில் நவீன கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி இன்று புதிய நடைமுறைகளை அரசு வெளியிட்டது. அதன்படி போக்குவரத்து காவலர்கள் தங்கள் உடலில் கேமராவை பொருத்தி போக்குவரத்தை கண்காணிக்க வேண்டும். எலக்ட்ரானிக் என்போர்ஸ்மெண்ட் கருவியை பயன்படுத்தி போக்குவரத்தை கண்காணித்தல் மற்றும் விபத்தை தவிர்க்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.