தமிழகத்தில் ரேஷன் கடைகள் நவம்பர் 25ஆம் தேதி சனிக்கிழமை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 3 முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை தொடர்ச்சியாக விடுமுறை இல்லாமல் ரேஷன் கடைகள் அனைத்தும் இயங்கின. இதற்கு ஈடாக கடந்த நவம்பர் 13ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 25 சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் இன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.