தமிழகத்தில் அரசு பள்ளிகளில் இந்த வாரம் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய திரைப்படத்தை திரையிட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குழந்தைகளுக்கான ஒழுக்கம் மற்றும் அறிவியல் சார்ந்த திரைப்படங்கள் ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட்டு வருகிறது.

மாதம் ஒரு திரைப்படம் பள்ளிகளில் திரையிடப்பட்ட அதில் உள்ள ஆரோக்கியமான அம்சங்கள், மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலமாக விவாதிக்கப்படும். அதன்படி பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கிய இடி தி எக்ஸ்ட்ரா டெர்ரஸ்ட்ரியல்என்ற திரைப்படத்தை இந்த மாதம் ஒளிபரப்பு செய்ய பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.