தமிழகத்தில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் பெரும்பாலான பெற்றோர்கள் அரசு பள்ளியை நாடினர். அதேசமயம் தற்போதும் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதனை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழக அரசும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த கல்விக்காக மாணவர் சேர்க்கை நாளை முதல் தமிழக அரசு பள்ளிகளில் தொடங்குகிறது.

இந்நிலையில் தனியாரை போல அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை காண பணிகளை முன்கூட்டியே தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பேரணி நாளை முதல் ஏப்ரல் 28ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. ஒன்னு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை குழந்தைகளை சேர்க்க விரும்புவோர் உடனே அரசு பள்ளியில் குழந்தைகளின் பெயரை பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.