தமிழகத்திற்கும் ஜப்பானிற்குமான தொடர்பு மிக மிக அதிகம் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழைக் காப்பது என்பது தமிழினத்தை காப்பதாகும். ஜப்பான் தமிழர்களின் அன்பான வரவேற்பை நான் மறக்க மாட்டேன். ஜப்பானில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு வருவார்கள்.

உங்கள் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகம் காத்திருக்கிறது என்று டோக்கியோவில் தமிழர்கள் இடையே முதல்வர் ஸ்டாலின் உரையாடினார். மேலும் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஜப்பான் நாட்டின் ஒசாகவில் உள்ள 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக புகழ் பெற்ற ஜப்பான் நாட்டின் கோட்டையான ஒசாகா கோட்டையை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.