இந்தியாவையே உறைய வைத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை மீதான தீர்ப்பை நாளை ஜனவரி 2ஆம் தேதி வழங்குகிறது உச்சநீதிமன்றம். பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த 2016 ஆம் வருடம் மோடி தலைமையிலான அரசு அறிவித்தது. இவ்வாறு அரசின் இந்த நடவடிக்கையை  எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நாளை தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது.

தொடர்ந்து இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்திற்கு குளிர்கால விடுமுறை விடுக்கப்பட்டதால் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி நீதிபதி எஸ்.ஏ. நசீா் தலைமையிலான அமர்வு பணமதிப்பிழப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க இருக்கிறது. ஆகவே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு செல்லுமா? செல்லாதா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.