இந்தியாவைப் பொறுத்தவரை பெரும்பாலான மக்கள் வங்கிகளில் பிக்சட் டெபாசிட்டையே விரும்புவார்கள். ஏனெனில் வங்கிகளில் பொதுமக்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மக்கள் வங்கிகளை தான் விரும்புவார்கள். இந்நிலையில் இந்தியாவில் ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருவதால் வங்கிகளிலும் பிக்சட் டெபாசிட்டுக்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எந்தெந்த வகைகளில் பிக்சட் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதன்படி எஸ்பிஐ வங்கியில் பொது பிரிவினருக்கு 3 சதவீதம் முதல் 6.75 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

அதன் பிறகு எச்டிஎஃப்சி வங்கியில் பொதுப் பிரிவினருக்கு 3 சதவீதம் முதல் 7 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனையடுத்து ஐடிபிஐ வங்கியில் பொது பிரிவினருக்கு 3 சதவீதம் முதல் 6.25 சதவீதம் வரையும், மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.00 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. கோடக் மகேந்திரா வங்கியில் வட்டி விகிதமானது பொது பிரிவில் 3.75 சதவீதம் முதல் 6.80 சதவீதம் வரையும், மூத்த குடி மக்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. கரூர் வைசியா பேங்கில் பொதுப் பிரிவினருக்கு 4 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையும் மூத்த குடிமக்களுக்கு 5.90 சதவீதம் முதல் 7.65 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது.

கனரா வங்கியில் பொதுப் பிரிவினருக்கு 3.25 சதவீதம் முதல் 7.00 சதவீதம் வரையும், மூத்த குடி மக்களுக்கு 3.25 சதவீதம் முதல் 7.50 சதவீத வரையும் அதிகரித்துள்ளது. ஆக்சிஸ் வங்கியில் பொது பிரிவினருக்கு 3.50 சதவீதம் முதல் 7.00 சதவீதம் வரையும், மூத்த குடி மக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. பேங்க் ஆப் பரோடாவில் மூத்த குடிமக்களுக்கு 3.50 சதவீதம் முதல் 7.25 சதவீதம் வரையும், பொதுப் பிரிவினருக்கு 3.00 சதவீதம் முதல் 7.75 சதவீதம் வரையும் அதிகரித்துள்ளது. மேலும் IDFC First Bank-ல் பொதுப் பிரிவினருக்கு 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரையும், மூத்த குடி மக்களுக்கு 4 சதவீதம் முதல் 8 சதவீதம் வரையும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது.