கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் பகுதியில் மலைவாழ் உண்டு உறைவிட தொடக்கப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் காலை உணவு அருந்தினர். அதன் பிறகு அந்த பாத்திரங்களை அவர்களே கழுவியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலானது.
இது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பிறகு அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெபஸ்டின் மற்றும் சமையலர் ராதிகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கையை மாவட்ட பழங்குடியினர்களா அலுவலகம் எடுத்துள்ளது.
