திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் அண்ணாதுரை. இவரது மகள் ரிதன்யாவுக்கு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கவின்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கடந்த மாதம் 28-ஆம் தேதி ரதன்யா காருக்குள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பில் அழுதபடி ஆடியோவை அனுப்பி உள்ளார். அதில் எனது சாவுக்கு கணவர், மாமனார், மாமியார் தான் காரணம் என உருக்கமாக பேசினார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்து செய்து சிறையில் அடைத்தனர். ஏற்கனவே கவின் குமார் ஈஸ்வரமூர்த்தியின் ஜாமீன் மனுவை திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தற்போது ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவியும் ஜாமீன் கேட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரதன்யாவின் பெற்றோர் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால் சித்ராதேவியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.