திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் ரிதன்யா என்ற இளம் பெண் காரில் விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக ரிதன்யா தான் தற்கொலை செய்து கொள்வதற்கு கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர்தான் காரணம் தந்தைக்கு வாட்ஸ் அப்பில் ஒரு ஆடியோ அனுப்பியுள்ளார்.

அவர்கள் வரதட்சனை கேட்டு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ரதன்யாவை கொடுமைப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கவின்குமார் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில் ரிதன்யாவின் முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, சந்தேகம் மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர். அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். என் மகளுக்கு நடந்ததை போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் என் மகளை தவறாக சித்தரிக்கின்றனர். என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள் என ரிதன்யாவின் தந்தை கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.