நெல்லையில் தகவல் தொழில்நுட்பம் துறையில் பணியாற்றிய கவின் கொலையால் தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவப்படுகொலைக்கு எதிராக பல அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தமிழக வெற்றி கழகம் என்ற புதிதாக கட்சி தொடங்கி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள நடிகர் விஜய் இதுவரை இந்த கொலை தொடர்பாக எந்தவிதமான கண்டனமும், இரங்கலும் தெரிவிக்காதது குறித்து, ஆளூர் ஷாநவாஸ் கடும் விமர்சனம் செய்துள்ளார். “கவின் கொலைசெய்யபட்ட அடுத்த 3 வது நாள் திருமாவை நெல்லையில் பார்த்தோம். ஆனால் விஜய் எங்கே போனார்? வாய்கூடத் திறக்கவில்லை.
கட்சி தொடங்கியதிலிருந்து தலித் பிரச்சனையை முன்னிறுத்தி போராடியிருக்கிறாரா? இந்த மௌனத்தில் இருந்து தலித் மக்கள் அவரை எப்படி நம்புவார்கள்?” எனக் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
