தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியைக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிமுக மூலமாக தமிழகத்தைப் பாஜக கைப்பற்றத் துடிப்பதாகக் குற்றம்சாட்டிய அவர், பாஜக எந்த மாநிலத்தில் நுழைந்தாலும் அங்கு தேவையற்ற சிக்கல்களும் பிரச்சனைகளும் மட்டுமே உருவாவதாகத் தெரிவித்தார்.

​ஒருவேளை தமிழகத்தில் பாஜக கூட்டணி (NDA) வெற்றி பெற்றால், பாஜக ஒரே ஒரு இடத்தில் வென்றிருந்தாலும் அவர்கள்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வார்கள் என்று ஒரு பகீர் தகவலை அவர் வெளியிட்டார். தமிழக மக்கள் பாஜகவை எப்போதுமே வெறுப்பவர்கள் என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வழிவிடுவது போன்றது என்றும் எச்சரித்தார்.