தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது மயிலாடுதுறை விழுப்புரம் உள்ளிட்ட இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. அதன்படி கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காரைக்காலிலும் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.