தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் மாலை 4 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதன்படி நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.