தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடை மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.