தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை 9 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகிறது. தமிழகத்தில் மொத்தம் 91.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4,30,710 பேரும், மாணவர்கள் 4,04,904 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 3718 பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண் பெறவில்லை.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெறும் எனவும் தேர்ச்சி அடையாத மாணவர்கள் மே 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.