தூத்துக்குடியில் புதூர் பாண்டியாபுரம் விளக்கு பகுதியில் நடந்த நாம் தமிழர் இன எழுச்சி பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதாவது, தூத்துக்குடி விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கவேண்டும். தமிழர்களுக்கு உதவி செய்வதாக நினைத்தால் தடையை நீக்கவேண்டும். இல்லாத இயக்கத்துக்கு எதற்கு தடை. எங்களை பார்த்து அஞ்சுகின்றனர். ஜீன் 13-ஆம் கன்னியாகுமரியிலிருந்து என் அரசியல் பயணம் தொடங்கி ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிவடையும்.

ஜனவரியிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்குவோம். அதன்பின் டிசம்பரில் பொதுக்குழு நடைபெறும். பாராளுமன்ற தேர்தல் முன்பே வரும் என்கிறார்கள். நமக்கு எப்போது வந்தாலும் கவலையில்லை. இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி 24 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடும். அதன்படி 20 பெண்கள் 20 ஆண்கள் போட்டியிடுவர். அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளும் இனிமேல் வளர முடியாது என்று அவர் பேசினார்.