தமிழகத்தில் விபத்து ஏற்படாத விதம் பட்டாசு ஆலை சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று வருவாய் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு இது குறித்து சிறப்பு கவன தீர்மானத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்தார்கள். இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்கவும் கூடுதல் இழப்பீடு தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இதற்கு பதில் அளித்து பேசி அமைச்சர் கே கே எஸ் ஆர் ராமச்சந்திரன் தமிழகத்தில் மொத்தம் 1482 பட்டா சாலைகள் உள்ளது.

பட்டாசு உற்பத்தி தொழில் சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டா ஆலைகளில் ஒரே நேரத்தில் தீவிரமாக சோதனை நடத்தி அவற்றை மூடிவிட முடியாது. இந்த ஆலைகளில் பணிக்கு செல்லும் அனைவரும் கூலி தொழிலாளர்கள். மாதத்தில் நான்கு நாட்கள் அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு தொழிலையும் பாதுகாக்க வேண்டியது அதே சமயம் அதில் பணியாற்றும் தொழிலாளர்களின் உயிரையும் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் தமிழகத்தில் விபத்து இல்லா சூழ்நிலையை கொண்டு வருவோம் என்று உறுதி அளித்துள்ளார்.