தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி செங்கோட்டையன் மே 4-ம் தேதி விசில் புரட்சி நடப்பது உறுதி என திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, தமிழகத்தை நாளை விஜய் ஆட்சி செய்ய இருக்கிற நிலையில் இன்று திருச்செந்தூர் முருகனை வழிபட்டுள்ளார். அவருடைய தொலைநோக்கு சிந்தனை தற்போது தமிழக மக்கள் அனைவரும் அவரைத்தான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் அளவுக்கு இருக்கிறது.

இதுவரை உலகம் முழுவதும் சோசலிஸ புரட்சி, வெண்மை புரட்சி, இனப் புரட்சி மற்றும் பசுமைப் புரட்சி என பல்வேறு புரட்சிகள் நடந்துள்ள நிலையில் வருகிற மே மாதம் நான்காம் தேதி விசில் புரட்சி நடக்க உள்ளது. மேலும் தமிழக வெற்றி கழகம் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது உறுதியெனவும் யார் கருத்து கூறினாலும் எங்களுடைய வெற்றியை தடுக்க முடியாது எனவும் திட்டவட்டமாக கூறினார்.