சென்னையில் உள்ள குரோம்பேட்டை ஆதம் நகர் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடபழனியில் அமைந்துள்ள ஒரு ஹார்வேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றிருந்தார். இவர் மது குடிக்க சென்ற போது அங்கிருந்த மூன்று பேர் மதுபோதையில் இவரிடம் தகராறு செய்துள்ளனர்.
அதாவது பரந்தாமனிடம் மூன்று பேர் வீண் தகராறில் ஈடுபட்டு அவரை சரமாரியாக தாக்கிய நிலையில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
