தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகப்பு விநியோகிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிலும் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் இதற்காக 248 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் ரொக்கப்பணம் குறித்து அறிவிப்பு வெளியாகவில்லை.

ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு தொகை கூட 5000 ரூபாய் பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அதிமுக சார்பில் பொங்கல் பரிசு தொகை வழங்க வேண்டும் என ஒட்டப்பட்ட போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அந்த போஸ்டரில் தமிழக அரசே குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் 5000 ரூபாய் வழங்க வேண்டும் என எழுதப்பட்டுள்ளது.