தமிழ்நாட்டில் புதிதாக விண்ணப்பித்த மகளிருக்கு எப்போது உரிமை தொகை வழங்கப்படும் என இன்று சட்டசபையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக புதிதாக ஏராளமான பெண்கள் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்கள் தங்களுக்கும் எப்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்கும் என்று பெரும் ஆவலோடு காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். மேலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலமாக விண்ணப்பித்ததில் தகுதியான பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.