சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத விதமாக  பொது போக்குவரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முயற்சியில் பல்வேறு மாநில அரசுகளும் ஈடுபட்டு வருகின்றன. இதில் மத்திய அரசும் தனது பங்களிப்பை கொடுத்து வருகிறது. எலக்ட்ரிக் பஸ்கள் எனப்படும் மின்சாரத்தால்மட்டுமே  இயங்கும் இ-பஸ்களை நடைமுறைக்கு கொண்டுவர மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகிறது. இந்தநிலையில் தான் ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்க்கும் விதமாக மத்திய அரசு முக்கியமான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டு இருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் பிரதான் மந்திரி இ-பஸ் சேவை திட்டத்தின் கீழ் சுமார் 10,000 எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு முதற்கட்டமாக நாடு முழுவதும், 5 ஆயிரத்து 613 கோடி ரூபாய் செலவில் 169 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தின் கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு. சேலம், திருப்பூர், அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் ஆகிய 11 மாநகரங்கள் இடம்பெற்றுள்ளன.