வருகிற பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாநிலங்களில் வசிப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நினைப்பார்கள். அந்த வகையில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம் போன்றவற்றில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு அதிகரித்து இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையிலிருந்து நெல்லை செல்ல ரூபாய்.1500 இருந்த கட்டணம் ரூபாய்.3,800 ஆக உயர்ந்துள்ளது. அதேபோன்று கோவைக்கு ரூபாய் ரூ.1000ல் இருந்து ரூ.2500 ஆகவும், திருச்சிக்கு ரூ.700 ல் இருந்து ரூ.4000 வரையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டண வசூலை தடுப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..