தமிழக அரசின் பொது நூலகத் துறையும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும், தென் இந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கமும் (பபாசி) இணைந்து சென்னையில் இந்த மாதம் 16, 17, 18-ஆம் தேதிகளில் முதல் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் சென்னை புத்தக கண்காட்சிக்கு ரூபாய்.6.60 கோடி நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. 790 அரங்குகளில் சுமார் 1 லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிபடுத்தப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளனர். வாசகர்களின் திருவிழாவில் நடப்பு ஆண்டு திருநங்கைகள், பால் புதுமையினர் இலக்கியங்கள் இடம்பெற இருப்பதாக பபாசி-ன் செயலாளர் எஸ்.கே. முருகன் தெரிவித்து உள்ளார்.