தமிழகத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு சமீபத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்ற நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அதில் கலந்து கொண்டார். அப்போது தமிழகம் முழுவதும் பள்ளிகளை ஆய்வு செய்ததில் சில தவறுகள் இருப்பதை கண்டறிந்ததாகவும் பள்ளியின் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றோம் மாணவர்களின் நலனுக்கு முழுக்க முழுக்க பள்ளி நிர்வாகம் தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் மாணவர்களின் மதிப்பெண்ணுக்காக மட்டுமே பள்ளியை செயல்படுத்தாமல் மாணவர்களின் நலனுக்காக அக்கறை கொண்டு பள்ளியை செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் நடைபெறும் தவறுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்தான் பொறுப்பு என்றும் தவறை சரி செய்ய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.