கன்னியாகுமரி ரயில் பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று  நவம்பர் 26 ஆம் தேதி முதல் கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயில்கள் நாகர்கோவில் மற்றும் அதற்கு அருகில் உள்ள ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 26 முதல் டிசம்பர் நான்காம் தேதி வரை நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி சிறப்பு ரயிலும், கொல்லம் மற்றும் கன்னியாகுமரி சிறப்பு மெமு ரயில் நவம்பர் 26 முதல் நவம்பர் 30ம் தேதி வரையும், டிசம்பர் 2 முதல் டிசம்பர் நான்காம் தேதி வரையும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகின்றது.

தாம்பரம் மற்றும் நாகர்கோவில் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் திருநெல்வேலி வரை இயக்கப்படும். எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அதிவிரைவு ரயில் டிசம்பர் 3 நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும். அதனைப் போலவே புனே மற்றும் கன்னியாகுமரி விரைவு ரயில் நவம்பர் 26 முதல் டிசம்பர் 2 வரையும், பெங்களூர் மற்றும் கன்னியாகுமரி விரைவு ரயில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரையும், ஹௌரா மற்றும் கன்னியாகுமரி அதிவிரைவு ரயில் நவம்பர் 27ஆம் தேதி வரை நாகர்கோவிலுடன் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.