
தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்டவை நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு புது பாட புத்தகம், சீருடைகள் மற்றும் புத்தகப் பைகளை வழங்க முதல்வர் ஸ்டாலின் நான்கு மாவட்டங்களை சேர்ந்த ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.