சென்னை உயர் நீதிமன்றத்தில் புழல் சிறையில் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்ற வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சிறை காவலர்களை உயரதிகாரிகளின் வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக எதிர்காலத்தில் புகார் வந்தால் கூட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள் சிறைத்துறையில் ஆர்டர்லி முறையை ஒழித்தது போன்று விரைவில் காவல்துறையிலும் ஒழிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் அதோடு  இந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.