தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த திட்டம் எப்போது செயல்பாட்டுக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசு மாநிலத்தின் நிதி நிலைமையை சரி செய்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் செயல்படுத்த உள்ளார் இன்று அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிரதம மந்திரி நீர் பாசன திட்டத்தின் கீழ் தையல் எந்திரம் மற்றும் விவசாயிகளுக்கு பேட்டரி தெளிப்பான் கருவி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது