தமிழகத்தில் உள்ள மலைப் பகுதிகளில் காலி மது பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு சுற்றுச்சூழலும் பாதிப்படைவதால் மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசு மலைப்பகுதிகளில் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை திருப்தி அளிக்கும் விதமாக செயல்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வெகுவாக பாராட்டியுள்ளது.

மேலும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் கோவை மற்றும் பெரம்பலூர் போன்ற மாவட்டங்களிலும் காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதோடு காலி மது பாட்டில்களை திரும்பப்பெற்று அதிலிருந்து வருவாய் ஈட்டும் வழிமுறைகள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.