தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஜூன் 3ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாட திமுக முடிவு செய்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கூட்டம் ஜூன் 15ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜூன் 20-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கோட்டத்தை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்து வைக்க உள்ளதாக திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.