திமுக கட்சியின் தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுவின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2023 ஜூன் 3-ஆம் தேதி முதல் 2024 ஜூன் 4-ஆம் தேதி வரை கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற இருக்கிறது. வடசென்னையில் ஜூன் 3-ம் தேதி மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. ஜூன் 20-ம் தேதி திருவாரூரில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் திறந்து வைக்க இருக்கிறார்.

அனைத்து ஊர்களிலும் திமுகவின் பழைய கொடி கம்பங்களை மாற்ற வேண்டும். எங்கும் கலைஞர் என்ற அடிப்படையில் கலைஞரின் முழு உருவ சிலை மற்றும் மார்பளவு சிலைகளை அமைத்திட முயற்சிகள் செய்ய வேண்டும். மாவட்டந்தோறும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பொற்கிழி  வழங்க வேண்டும்‌. அதன் பிறகு என்றென்றும் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டும். மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப கணினி மற்றும் நெட்வொர்க் வசதிகளுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு படிப்பகங்களை தொடங்கிட வேண்டும் போன்ற பல்வேறு தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டுள்ளது.